அலங்கார அன்னை ஆலய விழா கொடியேற்றம்
ADDED :1983 days ago
சிவகங்கை: சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. ஆலய கொடிமரத்தில் பாதிரியார் மரியடெல்லஸ் கொடியேற்றினார். புதிதாக பொறுப்பேற்க உள்ள பாதிரியார் ஏசுராஜா சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். சமூக இடைவெளியுடன் பங்கு இறை மக்கள் பங்கேற்றனர். ஆலய திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு சொற்ப எண்ணிக்கையில் பங்கு இறை மக்களை கொண்டு திருப்பலி நடைபெறும். ஆக.,14ல் திருவிழா சிறப்பு திருப்பலியும், ஆக.,15 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.