உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாமே கவலை!

வேண்டாமே கவலை!


ஒருநாள் மாலை நண்பரின் வீட்டிற்குச் சென்றார் முல்லா. பேச்சு மும்முரத்தில் நேரம் போனது தெரியவில்லை. இருட்டி விட்டது. வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை தேடி திரிந்தார் நண்பர்.
‘‘என்ன தேடுகிறீர்கள்’’ எனக் கேட்டார் முல்லா.
‘‘இருட்டிலா பேசிக் கொண்டிருக்க முடியும்? மெழுகுவர்த்தியை தேடுகிறேன்’’ என்றார் நண்பர். .
‘‘இதற்குப் போய் கவலைப்படுகிறீரே... இருட்டில் காது கேட்காது என யார் சொன்னது?’’ என்று  சிரித்தார் முல்லா.
நண்பரும் கவலை மறந்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !