உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு

ஈரோடு: ஆடி மாத நான்காவது வெள்ளியையொட்டி, ஈரோட்டில் பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன் வாய்க்கால் மாரியம்மன், வலசு மாரியம்மன் சத்திரம் மாரியம்மன் கோட்டை பத்ரகாளியம்மன், கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன், சின்னசேமூர் மஹா மாரியம்மன், கோட்டை வாரணாம்பிகையம்மன் உள்பட மாநகரில், 50க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில், நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. வீரப்பன்சத்திரம் மஹா மாரியம்மனுக்கு, தாலிக்கயிறு அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. நாட்டில் நோய் குறைந்து, சுபிட்சம் பெற, கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவிலில், சின்னமாரியம்மனுக்கு வெள்ளி கவசத்தில், மஞ்சள் காப்பு மகமாயி அலங்காரம் செய்து, வழிபாடுகள் நடந்தன. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையால், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !