உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகம் முழுவதும் ஒளிபரப்பான கந்தசஷ்டி பாராயணம்

உலகம் முழுவதும் ஒளிபரப்பான கந்தசஷ்டி பாராயணம்

கோவை: கோவையிலிருந்து உலகம் முழுவதும் கந்தர்சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி, இசை, நடனம் ஆன்லைனில் ஒளிபரப்பானது. கோவை சிரவை ஆதீனமும், பேரூர் ஆதீனமும் இணைந்து, கந்தர் சஷ்டி விழாவை ஞாயிறன்று மாலை 6.00 மணி முதல், முகநுால் வழியில் ‘ஆன்லைன்’ வழிபாடு நடத்தியது.சரவணம்பட்டியில் நடந்த விழாவில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும், பேரூரில் நடந்த நிகழ்ச்சியில் மருதாச்சல அடிகளும் தலைமை வகித்தனர். தென்சேரி மலையில் நடந்த கந்தர் சஷ்டி பாடல்கள் இடம் பெற்றன. உலக அளவில் அவரவர் வீடுகளிலில் கந்தர் சஷ்டி பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சலங்கையாட்டம், என பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பானது. சமூக இடைவெளியுடன், முக கவசத்துடன் நடந்த இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் நடந்தது. இந்த நிகழ்வுகளை https://www.facebook.com/PerurAadheenamcbe/videos/661338541404675 என்ற இணையத்தள முகவரியில் காண முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !