உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆடிக் கிருத்திகை வழிபாடு

செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆடிக் கிருத்திகை வழிபாடு

செஞ்சி: செஞ்சி, பி.ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். செஞ்சி பி. ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் 49 ஆவது ஆண்டாக ஒழுங்குமுறை விற்பனை கூட நெல் அரிசி மாநில வியாபாரிகள் மற்றும் எடை பணி தொழிலாளர்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை பத்து மணிக்கு வினாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். 10.30 மணி சக்திவேலுக்கு 108 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காவடி அபிஷேகமும், சக்திவேல் கோவில் உலாவும் நடந்தது. 11.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !