உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் ஆடி கிருத்திகை விழா: உற்சவருக்கு அபிஷேகம்

வடபழனி முருகன் ஆடி கிருத்திகை விழா: உற்சவருக்கு அபிஷேகம்

சென்னை: வடபழனி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

வடபழனி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். கிருத்திகை நாளில் கோவிலில், ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். இந்தாண்டு, கொரோனா தொற்றால் கோவில் மூடப்பட்ட நிலையில், ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஆடிக்கிருத்திகையொட்டி வடபழனி முருகன் கோவில் வாசலில் அதிகாலை முதல் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் வசதிக்காக கிருத்திகை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தரிசனம் செய்ய லிங்கை கிளிக் செய்யவும்.


Link: https://www.dinamalar.com/video_main.asp?news_id=2203&cat=live


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !