தனுசு: போட்டியில் வெற்றி
ADDED :1887 days ago
தன் நலம் கருதாத தனுசு ராசி அன்பர்களே!
மாத பிற்பகுதியில் அதிக நன்மை கிடைக்கும். புதன் ஆக. 29ல் சாதகமான இடத்திற்கு வருவதால் பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர் அவர்களால் பொன், பொருள் சேரும். அவப்பெயர் மறைந்து சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன் ஆக.31ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். இதனால் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். இருப்பினும் குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆக.29க்கு பிறகு கணவர், குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். மேல்அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல வருமானத்தை காணலாம். சனிபகவானால் வெளியூர் வாசம் இருக்கும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. ஆக.29க்கு பிறகு கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மாத பிற்பகுதியில் ஆற்றல் மேம்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
* வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். கடந்த காலத்தில் ஏற்பட்ட அவப்பெயர், பணஇழப்பு ஆகியவை ஆக. 29க்கு பிறகு மறையும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு புதனால் ஏற்பட்ட செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஆக.29க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதனின் பலத்தால் பதவி உயர்வு காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினருக்கு வளர்ச்சியான காலகட்டமாக அமையும்.
* மருத்துவர்கள் வேலையில் திருப்தி காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
* வக்கீல்கள் ஆக.29க்கு பிறகு சிறப்பான நிலையில் இருப்பர். வேலையில் திறமை பளிச்சிடும். நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்களுக்கு பெண்களால் ஏற்பட்ட பிரச்னை ஆக.31க்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவ முன்வருவர்.
* விவசாயிகள் மாத பிற்பகுதியில் நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். பாசி பயறு நெல்,உளுந்து, சோளம், பழவகைகள் மூலம் வருமானம் உயரும். ஆக.29க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும்.
* மாணவர்களுக்கு ஆக.29க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெற்றி கிடைக்கும். கல்வி வளர்ச்சி ஏற்படும். கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.
சுமாரான பலன்கள்
* ஆசிரியர்களுக்கு வேலையில் அதிக பளுவும், அலைச்சலும் இருக்கும். குருபார்வையால் சிரமங்கள் குறையும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும்.உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* தரகு, கமிஷன் தொழிலில் பண விரயம் ஆகலாம். முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம்.
* அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
நல்ல நாள்: ஆக.21,22,23,24,25,28,29 செப். 1,2,3,9,10,11,12
கவன நாள்: ஆக.17,18 செப். 13,14,15 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5,9 நிறம்: பச்சை, வெள்ளை.
பரிகாரம்:
* செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
* திங்கட்கிழமையில் சிவனுக்கு வில்வார்ச்சனை