சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1932 days ago
புதுச்சேரி : புதுநகர் சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது. ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அன்னை சொர்ண முத்து மாரியம்மன் கோவிலில், ஆடிமாத உற்சவம் கடந்த 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று (15ம் தேதி) காலை 9:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.நாளை (16ம் தேதி) அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.