உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொச்சைப்படுத்தி பேசுவோர் மனம் திருந்த பிரார்த்தனை

கொச்சைப்படுத்தி பேசுவோர் மனம் திருந்த பிரார்த்தனை

 பொள்ளாச்சி:பொள்ளாச்சி காளியண்ணன்புதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், திருவிளக்கு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி கோவில்பாளையத்தை அடுத்த, காளியண்ணன்புதுாரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடந்த, திருவிளக்கு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், தொய்வின்றி விரைவில் நிறைவடைய வேண்டும், இந்து ஆன்மிக நம்பிக்கைகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசுவோர் மனம் மாற, இறைவன் அருள் புரிய வேண்டும். ஞான பூமி என புகழப்படும் பாரத தேசத்தில் ஆன்மிகம் என்றும் தழைத்தோங்க வேண்டும், என, வழிபாடு நடத்தப்பட்டதாக, வழிபாட்டுக் குழு தலைவர் தனபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !