பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
அனுப்பர்பாளையம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விசர்ஜனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட அரசு தடை விதித்தது. இதனையொட்டி, இந்து அமைப்புகள் கோவில், வீடு, தனியார் நிறுவனம், தனியார் காம்ப்ளக்ஸ், ஆகியவற்றில் நவிநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபட்டனர். திருப்பூர் அனுப்பர்பாளையத்தில், சிவசேனா சார்பில் - 2, வி.எச்.பி. சார்பில் - 2, அனுமன் சேனா சார்பில் - 1, இந்து முன்னணி சார்பில் - 47, என 51 சிலைகளும் வேலம்பாளையத்தில், இந்து முன்னணி சார்பில் - 42, திருமுருகன்பூண்டியில், இந்து முன்னணி சார்பில் - 40, சிலைகள் பிரதிஷ்டை செய்திருந்தனர். மாலையில் பிரதிஷ்டை சேர்ந்த சிலைகளை வேன் மூலம் எடுத்து சென்று வெங்ஙமேட்டில் உள்ள ஒரு குட்டையில் விசர்ஜனம் செய்தனர். பெருமாநல்லூரில் இந்து முன்னணி சார்பில் - 12, இந்து மக்கள் கட்சி சார்பில் - 1, என 13 சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலையில் அருகில் உள்ள கிணற்றில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.