உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எளிமையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா

எளிமையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா

ஊட்டி:  நீலகிரியில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடந்தது. நீலகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இம்முறை விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இதனால், வீடுகள் மற்றும் கிராம கோவில்களில சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தந்த பகுதிகளில் உள்ள குளங்களில் கரைக்கப்பட்டது.

மேலும், இந்து முன்னணி, வி.எச்.பி., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒன்றரை அடி முதல் மூன்றரை அடி வரை பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், அந்தந்த பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள மையப்பகுதிகளுக்கு சிலைகள் கொண்டுவரப்பட்டு, பின், வாகனங்கள் எடுத்து சென்று கரைக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும், 266 சிலைகள் கரைக்கப்பட்டன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில், 16 சிலைகள் காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்பட்டது. ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் அங்குள்ள விநாயகர் சிலைக்கு அர்ச்சகர் ராகவேந்திரா, 2 கிலோ வெண்ணெய், மாதுளை பழம், ஏலக்காய் உள்ளிட்டவைகள் கொண்டு மூன்று மணி நேரம் விநாயகருக்கு அலங்காரம் செய்தார். மாவட்டம் முழுவதும் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !