உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு

திருச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு

திருச்சி : திருச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழும் சூரிய வழிபாடு நிகழ்வு நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் தென் திசையில் சாய்ந்து சூரியன் பயணிப்பதை தட்சிணாயன காலம் என்றும் ஆறு மாதங்கள் வடதிசையில் சாய்ந்து பயணிப்பதை உத்தராயன காலம் என்றும் கூறுகின்றனர். சோழ மன்னன் கரிகால சோழன் காலத்தில் திருச்சி சர்க்கார்பாளையத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டது. தட்சிணாயன காலமான ஆவணி மாதத்தில் தென்திசையில் சாய்ந்து பயணிக்கும் சூரியக்கதிர்கள் சிவலிங்கம் மீது விழும் வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுஉள்ளது. ஆவணி மாதம் 7ம் தேதியான நேற்று காசி விஸ்வநாதர் கோயில் சிவலிங்கம் மீது சூரியக் கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நடந்தது. இதையொட்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.நேற்று முழு ஊரடங்கு என்பதால் சூரிய வழிபாடு நிகழ்வை சர்க்கார் பாளையம் கிராம மக்கள் மட்டும் தரிசனம் செய்தனர். ’ஆவணி மாத சூரிய வழிபாடு இன்றும் நாளையும் என மூன்று நாட்களுக்கு நிகழும்’ என கோவில் அர்ச்சகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !