துன்பம் கண்டு சிரிக்காதீர்
ADDED :2034 days ago
இன்றைய உலகில் மனிதர்களுக்கு இடையே பகை ஏற்படுவது சகஜமாகி விட்டது. ஒருவனுக்கு துன்பம் நேர்ந்தால் இன்னொருவன் மகிழ்கிறான். இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் ஒவ்வொருவரையும் தன் சகோதரனாகவே பார்ப்பான். மற்றவர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடைய மாட்டான். நமக்குள் கருத்து வேறுபாடு வருவது இயற்கையே. அதற்காக மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பவன், மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அத்துடன் கொடிய தண்டனையும் பெற வேண்டியிருக்கும்.
உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியடையாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து அந்த துன்பத்தை களைந்து விடுவான். உன்னை துன்பத்தில் ஆழ்த்தி விடுவான்.