உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

பூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: வயலூர், பூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலூர் பகுதியில், பிரசித்தி பெற்ற பூவாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மதியம், அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் ஆகிய பொருட்களை கொண்டு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. பின்னர், மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்தனர். அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல், சுற்று வட்டாரங்களில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !