உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள்: ஆய்வில் தகவல்

அருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள்: ஆய்வில் தகவல்

அருப்புக்கோட்டை: சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்று பொருள். இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய 8 மகா சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் பொது வாழ்க்கைக்கு உடன்படாதவர்கள். தங்களுக்கு என்று தனி வாழ்வியல் முறைகளை ஏற்படுத்தி கொண்டவர்கள். இயற்கையோடு இயற்கையாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இதனால் இவர்களுக்கு இயற்கையை கடந்த சக்தி உள்ளது என்கின்றனர். பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடலில் தான் உள்ளது. உடலை நன்கு பராமரிப்பதே கடவுளுக்கு செய்கின்ற பணி. இதுவே சித்தர்களின் கொள்கை. இத்தகைய சித்தர்கள் அருப்புக்கோட்டையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். சில 100 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை ஒரு வில்வவனமாக இருந்துள்ளது. சுற்றிலும் மல்லிகை தோட்டங்கள் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. இயற்கையான சூழ்நிலை பிடித்து போனதால் பல சித்தர்கள் இதையே இருப்பிடமாக தேர்ந்தெடுத்தனர்.

இவற்றை ஆய்வு செய்த அருப்புக்கோட்டை பேராசிரியர் முனியராஜ் ஸ்ரீ உஜ்ஜிசாமி, வீரபத்ர சாமி, சுப்பா ஞானியார், ஆத்மானந்தா சுவாமி, தெட்சிணாமூர்த்தி, மவுன சாமி,தீப்பெட்டி சாமி, ஆதிலிங்க சாமி என 15 வகை சித்தர்கள் வாழ்ந்ததாக கூறினார். அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டையில் 15 வகையான சித்தர்கள் மீனாட்சி சொக்கநாதர் கோயிலை சுற்றியே உள்ளனர். ஆன்மிக நாட்டம் மற்றும் சித்தர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருப்பதால் சித்தர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் என்ற புத்தகத்தை எனது குருநாதர் வரலாற்று ஆய்வாளர் விவேகானந்தம் உடன் சேர்ந்து எழுதி உள்ளேன். இதோடு மாவட்டத்தில் உள்ள 63 வகையான சித்தர்கள் பற்றியும் ஆராய்ந்துள்ளேன். அதை புத்தகமாக வெளியிட உள்ளேன்,என்றார்.

தகவலுக்கு 94887 18456.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !