உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா

 ராமநாதபுரம் : வாலாந்தரவை ஊராட்சி மொட்டையன் வலசை கிராமத்தில் உள்ள மகாசக்தி கணபதி, முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி செப்.8 மாலை 6:00 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. செப்.9ல் காலை 7:00 மணிக்கு சூரிய பூஜை, கோமாதா பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, ருத்ர ஜெபம்நடந்தது. 9:30க்கு நாடி சந்தானம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.அதனை தொடர்ந்து 10:45 மணிக்கு சிவாச்சாரியார் மனோகர குருக்கள் தலைமையில் ஸ்துாபி கலச கும்பாபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !