கிருஷ்ண ஜெயந்தி விழா: கோவை கோவில்களில் கோலாகலம்
ADDED :1893 days ago
கோவை: பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது.காலை, 8:00 மணிக்கு, சுதர்சன ஹோமம், காலை 10:00 மணிக்கு, திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது, தீர்த்த பிரசாதம், வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையை தொடர்ந்து, கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி நடந்தது.வேணுகான பஜனை குழுவினரின், நாமசங்கீர்த்தனம் நடந்தது. மாலை, கோவில் வளாகத்தில், சுவாமி திருவீதி உலாவும், உறியடி உற்சவமும் நடந்தது. இதே போல், கோவையிலுள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.