வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1892 days ago
உடுமலை: உடுமலை சின்னவாளவாடி ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.காலை, 8:00 மணிக்கு, சுதர்சன ேஹாமம், காலை 10:00 மணிக்கு, திருமஞ்சனம், தீபாராதனை நடந்து, தீர்த்த பிரசாதம், வழங்கப்பட்டது. தொடர்ந்து, வேணுகான பஜனை குழுவினர் நாமசங்கீர்த்தனம் நடந்தது. மாலை கோவில் வளாகத்தில், சுவாமி திருவீதியுலாவும், உறியடி உற்சவமும் நடந்தது. இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.