சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :1890 days ago
மேட்டுப்பாளையம்:காரமடை, கோவை சாலையில், பாமா, ருக்மணி சமேத சந்தான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, மூலவர், உற்சவருக்கு, திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர் ஆகியோர், பெரிய திருமொழியில் திவ்ய பிரபந்தங்களை, சுவாமி முன்பு செய்வித்தனர்.மங்கள ஆரத்தி, சாற்றுமுறையை அடுத்து, கோவில் வளாகத்துக்குள், பாமா, ருக்மணி சமேதராக, சந்தான வேணுகோபால சுவாமி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதையடுத்து, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை கோவிலில் உறியடி உற்சவ சங்கல்ப நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.