உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

சென்னிமலை: சென்னிமலை, காட்டூரில் உள்ள, செல்வ விநாயகர் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில், நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ஆண்டு நடந்தது. இந்நிலையில் முதலாமாண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி மகா கணபதி ஹோமம், யாக சாலை பூஜை, மகா தீபாராதனை, செல்லாண்டியம்மன் மற்றும் செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை காட்டூர் மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !