சுகவனேஸ்வரர் கோவிலில் அமாவாசை தர்ப்பணம் ரத்து
ADDED :1884 days ago
சேலம்: கொரோனா பரவலால், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு, மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது, என, உதவி கமிஷனர் ரமேஷ் கூறினார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா அதிகரித்து வருவதால், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், செப்., 15ல் நடக்கும் பிரதோஷ பூஜை, அபி?ஷகத்தை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு பின், தரிசனத்துக்கு மட்டும் உரிய வழிமுறைப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதேபோல், செப்., 17, மகாளய அமாவாசையன்று, மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் கொடுப்பது, இம்முறை நடக்காது. பக்தர்கள், தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.