உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மானாலே மனஉறுதி தான்

அம்மானாலே மனஉறுதி தான்

காந்திஜியின் தாயார் புத்லிபாய் அம்மையார், தினமும் பிரார்த்தனை செய்த பிறகே, சாப்பிடும் வழக்கம் கொண்டவர். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை (4 மாத தொடர் விரதம்) தவறாமல்  மேற்கொள்வார். உடல்நிலை  அல்லது வேறு காரணங்களைக் காட்டி விரதத்தைக் கைவிட்டதில்லை.  ஒருமுறை சாதுர்மாஸ்ய விரதத்தின் போது, தினமும் சூரியதரிசனம் செய்த பின் உணவு உண்பது என முடிவெடுத்தார். அது மழைக்காலம் என்பதால் சூரியன் வானில் அடிக்கடி தென்படுவதில்லை. காந்திஜியும், அவருடைய சகோதரர்களும் சூரியன் வெளிபபடுகிறதா என பார்க்க  வெளியில் காத்திருப்பர். மேகக் கூட்டத்தில் இருந்து சூரியன் வெளிப்பட்டதும் ஓடிவந்து அம்மாவை அழைப்பர். புத்லிபாய் வெளியே வருவதற்குள், கரிய மேகம், சூரியனை மறைத்துவிடும். ஒருநாள், இப்படி நான்கைந்து முறை வந்து சென்று விட்டார். கடைசியில், இன்று நான் சாப்பிடுவதை கடவுள் விரும்பவில்லை! அதனால் தான் சூரியன் கூட நான் வருவதற்குள் மறைந்து விடுகிறது, என்று சொல்லியபடியே வீட்டுவேலையைக் கவனிக்க கிளம்பிவிட்டார். அம்மாவின் மனஉறுதி காந்திஜியை மிகவும் கவர்ந்தது. அவரைப் போலவே, உண்ணாநோன்பை வாழ்நாளின் இறுதிக் காலம் வரை பின்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !