இல்லை என மறுக்காத எல்லையம்மன்
ADDED :4901 days ago
யதிராஜர் என்பது ராமானுஜரின் இயற்பெயர். சுவாமிதேசிகன், அவர் மீது இயற்றிய ஸ்தோத்திரம் யதிராஜ சப்ததி. அதில் ராமானுஜரின் திருவடியைப் பற்றுவது ஒன்றே சிறந்த வழி என்று விளக்கம் தருகிறார். பிரம்மாவைச் சரணடைய சத்தியலோகம் சென்றால், அவர் நாவிலே சரஸ்வதி நர்த்தனம் செய்கிறாள். கைலாயத்திற்குச் சென்றால் சிவன்தன் உடம்பில் சரிபாதியை பார்வதிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். வைகுண்டம் சென்றால் விஷ்ணுவையே காணவில்லை. ஆயர்பாடியில் கோபியருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். மும்மூர்த்திகளும் பெண்களுக்காக வாழ்வதால், யதிராஜராகிய ராமானுஜரின் திருவடியைப் பற்றுவது ஒன்றே நல்லது. அவரைச் சரணடைந்தவர்க்கு ஆசை ஒருபோதும் உண்டாகாது, என்று போற்றுகிறார்.