பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் சீரமைப்பு பணிகள் துவங்கியது
ADDED :1847 days ago
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் ரூபாய் 67 லட்சம் மதிப்பில் மேல் தளம் சீரமைப்பு பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மேல் தளம் சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பேரில் சீரமைப்பு பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி பூஜைகளுடன் பணிகளை துவக்கி வைத்தார். அப்போது செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் சுரேஷ், தொழில்நுட்ப பிரிவு அலுவலர் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.