ராமகிரி கோயிலில் கொடிமர கவசம்
ADDED :1847 days ago
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராகிரி கல்யாணநரசிங்க பெருமாள் கோயில் உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோயிலை புதுப்பிக்க பொதுமக்கள் சார்பில் திருப்பணிக்கமிட்டி அமைத்து கும்பாபிஷேகம் நடந்தது. பின் கொரோனா பாதிப்பால் கோயில் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்குப்பின், நேற்று அர்ச்சகர்கள் மந்திரங்கள் முழங்க கொடி மரத்திற்கு கவசங்கள் பொருத்தி, கருடாழ்வாருக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அறநிலையத்துறைசெயல் அலுவலர் மகேஸ்வரி, கோயில் பக்தசபா டிரஸ்ட் தலைவர் கருப்பணன், தொழில்அதிபர் சாமியப்பன், செயலாளர் வீரப்பன் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர்.