உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசை விழா: கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்

அமாவாசை விழா: கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்

உடுமலை:உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசித்தனர். உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையையொட்டி, நேற்று காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன.பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அமணலிங்கேஸ்வரரை தரிசித்தனர்.  பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பலரும் கோவில் அருகேயுள்ள தோணியாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபட்டனர்.பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்:உடுமலை அருகே திருமூர்த்தி மலைக்கு நேற்று விடுமுறை நாள் மற்றும் அமாவாசை என்பதால் வழக்கத்தை விட அதிகளவுகூட்டம் காணப்பட்டது. இங்கு வந்த சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் பஞ்சலிங்க அருவிக்கு சென்று குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனைமலைஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

நேற்று அமாவாசை தினம் என்பதால் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்ட நடை இரவு முழுவதும் அடைக்கப்படாமல் பக்தர்களில் வசதிக்காக திறக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதலே பக்தர்கள் அம்மன் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசன வழியிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 6.30 மணிக்கும், 11.30 மணிக்கும், மாலை 4.00 மணிக்கும்,6.30 மணிக்கும் சிறப்பு அபிசேக பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமாவாசை தினத்தை முன்னிட்டு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பூஜைகளுக்குகான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !