திருப்பதி பிரம்மோற்சவம் 6ம் நாள்: கஜவாகனத்தில் மலையப்பசுவாமி
ADDED :1846 days ago
திருப்பதி: திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் 6ம் நாளான நேற்று இரவு மலையப்பசாமி கஜவாகன அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி கோவிலுக்குள் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் 6ம் நாளான நேற்று காலை சர்வ அலங்காரத்துடன் மலையப்பசுவாமி எழுந்தருளினார். இரவு கஜவாகன அலங்காரத்தில் வந்தருளினார். கோவிலின் அதிகாரபூர்வமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) https://www.youtube.com/user/SVBCTTD நேரலையில் அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும்.