பணமும் நீண்ட ஆயுளும் பெற...
ADDED :1849 days ago
பிரம்மாவிடம் ஒருமுறை நாரதர், ‘‘சுவாமி! கலியுகத்தில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறந்த விரதம் எது?” எனக் கேட்டார். ‘‘ மகாவிஷ்ணுவை வழிபடும் புரட்டாசி சனி விரதமே சிறந்தது” என்றார். இதனை மேற்கொள்பவர்கள் புரட்டாசி சனியன்று அதிகாலையில் நீராடி துளசி தீர்த்தம் அருந்தி விரதம் தொடங்குவர். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பானகம் போன்ற நைவேத்யங்களை படைத்து தானம் அளிப்பர். இதன் மூலம் கிரக தோஷம் அகலும். ஆயுள் பெருகும். உடல்நலம் சிறக்கும். செல்வம் சேரும்.