சொல்லிக் காட்ட வேண்டாமே!
ADDED :1902 days ago
சிலர் தாங்கள் செய்ததை, ‘‘நான் இன்னாரது மகளின் திருமணச் செலவு முழுவதும் ஏற்றுக் கொண்டேன். இன்னாரின் மருத்துவச் செலவுக்கு கைகொடுத்தேன்.’’ என தம்பட்டம் அடிப்பர். இப்படி சொல்வதால் அதற்கான நன்மை மறையும்.
தன்னிடமுள்ள பணத்தை ஏழைகளுக்கு செலவழிப்பதன் மூலம் இரட்டிப்பான நன்மை கிடைக்கும். ஏனெனில் நீங்கள் செய்யும் செயல்களை இறைவன் பார்க்கிறான். ஆனால் செய்த தர்மத்தை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுபவர்களை மறுமை நாளில் இறைவன் சந்திக்க விரும்ப மாட்டான்.