ஒரே செடியில் பூத்த 19 பிரம்ம கமலம் பூக்கள்
ADDED :1933 days ago
கிருஷ்ணகிரி, : ஒரே செடியில், 19 பிரம்ம கமலம் பூக்கள் பூத்ததை, மக்கள் பலர் பார்த்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கூச்சானுாரைச் சேர்ந்தவர், மதிவாணன். இவர், தன் வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அந்த செடியில் ஒரே நேரத்தில், 19 பூக்கள் பூத்தன. இதை பார்த்த மதிவாணன் குடும்பத்தினர், செடிக்கு பூஜை செய்து வழிபட்டனர். ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்த மலர், ஓரிரு நாளில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டது. மருத்துவக் குணமும், தெய்வீக தன்மை வாய்ந்ததாக கருதப்படும் இந்த மலரை, பூக்கும் நேரத்தில் தரிசனம் செய்தால், நன்மை கிடைக்கும் என நம்பப்படுவதால், அப்பகுதி மக்கள், நேரில் சென்று பிரம்ம கமலம் பூக்களை பார்த்துச் சென்றனர்.