உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமண சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

வெங்கட்ரமண சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் அருகே குட்டூரில் உள்ள, வெங்கட்ரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று, சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் பூசிநாயக்கனூர், கப்பல்வாடி, கொல்லகொட்டாய், மூன்றாம்பட்டி, பையனூர், கரடிகொல்லப்பட்டி, பூதனூர், மங்கலப்பட்டி, பர்கூர், கொட்டம்பட்டி, மூங்கம்பட்டி, சாமல்பட்டி உள்ளிட்ட, 27 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !