உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் புரட்டாசி பவுர்ணமி விழா

திருக்கழுக்குன்றத்தில் புரட்டாசி பவுர்ணமி விழா

 திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், திருமலை சொக்கம்மன் கோவிலில், புரட்டாசி பவுர்ணமி விழா, நேற்று, கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், 545 படிக்கட்டுகளுடன், 500 அடி உயரத்தில் உள்ளது.இங்கு, திருவண்ணாமலையைப் போல், மாதந்தோறும், பவுர்ணமி கிரிவலமும் விமரிசையாக நடக்கும். கொரோனா ஊரடங்கில், தளர்வு அளிக்கப்பட்ட பின், நேற்றைய புரட்டாசி பவுர்ணமி தினத்தில், பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலப்பாதையில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில்களின் துணைகோவிலான, திருமலை சொக்கம்மன் கோவிலுக்கும், பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்தனர். இக்கோவிலில், மூலவர் சொக்கம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால், காலையில் மகா அபிஷேகம், தீப, துாப ஆராதனைகளும் நடந்தன.தொடர்ந்து, முத்தங்கி சேவை அலங்காரத்தில், சொக்கம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !