காளியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :1836 days ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கிழக்காஞ்சிரங்குளம் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திகடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்,தீபாராதனை நடந்தது. இரவில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து அதன்மேல் தீபமேற்றி வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திகடனை செலுத்தினர்.