மழை வேண்டி முளைப்பாரி உற்ஸவம்
ADDED :1924 days ago
திருப்புவனம் : திருப்புவனத்தில் மழை வேண்டி முளைப்பாரி உற்ஸவம் சிறப்பாக நடந்தது. திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயிலில் வருடம் தோறும் புரட்டாசியில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா செப். 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி இரவில் அம்மனிடம் மழை வேண்டி பாடல்கள் பாடப்பட்டன. நேற்று 8ம் நாள் முளைப்பாரி சுமந்து நகர் முழுவதும் வலம் வந்து நீர் நிலைகளில் கரைத்தனர்.ஏற்பாடுகளை திருப்புவனம் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.