சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள் துவக்கம்
ADDED :1822 days ago
நெய்வேலி; நெய்வேலியில் தருமபுர ஆதீனத்தின் சார்பில்சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்க விழாநடந்தது.
நெய்வேலி வட்டம் 16ல் உள்ள பன்னிரு திருமுறை வளர்ச்சி கழக கலையரங்கத்தில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள் துவங்கியது.என்.எல்.சி.,யின் முன்னாள் செயல் இயக்குநர் மணி அருள் குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்து சைவ சித்தாந்தத்தின் பெருமைகள் குறித்து பேசினார்.திட்ட இயக்குனர் சிவசந்திரன், பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழக செயலாளர் இரணியன் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் தீனதயாளன் வரவேற்றார். பயிற்சியின் அவசியத்தை விளக்கி பேராசிரியர் பொன்னம்பலம் பேசினார்.பயிற்சியில் 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். சிவனடியார்கள் ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், பரமசேகர், செல்வமுத்துக்குமரன் பேசினர். துணை அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.