உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் துாய்மைப்பணி
ADDED :1824 days ago
ராமநாதபுரம் : நுாறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. கோயில் வளாகத்தை சுற்றி ஏராளமான செடிகள் வளர்ந்து இருந்தது. தற்போது ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் மூலம் சுவாமி, அம்மன் கோபுர வளாகங்களில் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.