அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :4898 days ago
பெண்ணாடம் : அமாவாசையையொட்டி பெண்ணாடம் நாகலட்சுமி அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது.பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நாகலட்சுமி அம்மன் கோவிலில் நேற்று முன் தினம் அமாவாசையையொட்டி சிறப்பு குத்து விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு கோவில் வளாகத்தில் 108 சுமங்கலி பெண்கள் இணைந்து மழை, இயற்கை வளம், மத நல்லிணக்கம் வேண்டி சிறப்பு குத்துவிளக்கு பூஜை செய்தனர். பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.