மண் லிங்கம் தெரியும்...மர லிங்கம் தெரியுமா?
ADDED :1828 days ago
மரகதத்தினால் லிங்கம், ஸ்படிகத்தினால் லிங்கம், கல்லினால் லிங்கம் செய்து வணங்குவது போல் மரத்தால் செய்யப்படும் லிங்கங்களுக்கு தாருலிங்கம் என்று பெயர். சிவாலயங்களில் பால பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக காலங்களில் மூல லிங்கத்தை பெயர்த்தெடுத்து. அதன் சக்தியை தாருலிங்கத்தில் ஆவாஹனம் செய்து, திருப்பணி முடியும்வரை தாருலிங்கத்தை வழிபடுவர். சந்தனம், தேவதாரு, வன்னி, அரசு, அகில், கருங்காலி, வேங்கை, வில்வம் முதலிய மரங்களில் தாருலிங்கம் செய்வர்.