உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி வாகனம் வெள்ளோட்டம்

சுவாமி வாகனம் வெள்ளோட்டம்


 வாலாஜாபாத் : சுவாமி வீதி உலா செல்லும் வாகனத்திற்கு, நேற்று வெள்ளோட்டம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், சுவாமி வீதி உலா செல்வதற்கு, புதிதாக நான்கு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அந்த வாகனத்தின் வெள்ளோட்டம், நேற்று நடந்தது.ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் நிர்வாகிகள், வாகனத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, திருஷ்டி கழித்து வாகனத்தை வெள்ளோட்டம் பார்த்தனர். கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !