இயேசுவின் டைனிங் டேபிள்
ADDED :1823 days ago
இயேசுவின் சீடர்களில் ஒருவர் மத்தேயு. இவரது வீட்டிற்கு சென்ற இயேசு விருந்துண்ண அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்த மேஜைக்கு ‘டிரை கிளினியம்’ என்று பெயர். ‘டிரை’ என்றால் ‘மூன்று’. மூன்று மேஜைகள் போடப்பட்டு, சுற்றிலும் மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்தது. அந்த பெஞ்சில் மெத்தைகள் இருந்தன. பெஞ்சில் சாய்ந்து கொள்ள திண்டு போன்ற அமைப்பும் உண்டு. சாப்பிடுவதற்கு வசதியான இந்த டைனிங் டேபிளை ரோமானியர்கள் வடிவமைத்தனர்.