பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்
குளித்தலை: பாதிரிப்பட்டி, மேற்கு காலனியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி கிராமத்தில், மேற்கு காலனியில், பொதுமக்களால் விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இதற்கான, கும்பாபிஷேக விழா நடத்த மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டு, பின்னர் யாகசாலையில் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர், தொடர்ந்து, அபிஷேக ஆராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கலந்துகொண்டனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
* பாதிரிப்பட்டி மேற்கு காலனி பகுதியில், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது, கிராம மக்கள் ஒன்று கூடி, கோவில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இதனால், இந்த கிராமத்தை சேர்ந்த குமரேசன், 35, கலியபெருமாள், 50, சுப்பிரமணி, 70, ராமசாமி, 65, கிருஷ்ணன், 36, பழனி, 55, ஆகியோர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.