உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்பட்டி ராமபிரான் கோயில் கும்பாபிஷேகம்!

மீனம்பட்டி ராமபிரான் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகாசி:சிவகாசி அருகே மீனம்பட்டி கல்யாண ராமபிரான் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. மீனம்பட்டி கம்மவார் நாயுடு சமூகம் கல்யாண ராமபிரான் திருக்கோயில் மற்றும் கோபுரத்தில், கலை நுணுக்கத்தோடு சிலைகள், சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் தலைமையில், நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நாலாயிரம் திவ்ய பிரபந்தம், வேதபாராயணம், வால்மீகி ராமாயண சுந்தர காண்டம் ஆகிய பராயணங்கள் ஆழ்வார்களால் பாடப்பட்டு வருகிறது.இன்று பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வானமாமலை மடம் 30வது பட்டம் கலியன் வானமாமலை ஜீயர் சுவாமிகள் நடத்தி வைக்கிறார். பஜனை, வான வேடிக்கை, அன்னதானம் நடக்கிறது. இரவில் ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !