உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னை கோவிலில் திரட்டுப்பால் விழா

மன்னை கோவிலில் திரட்டுப்பால் விழா

மன்னார்குடி: மன்னார்குடியிலுள்ள மன்னை நகர் ஜெயங்கொண்ட நாதர் கோவிலில் வைணவர்கள் மற்றும் சைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திரட்டுப்பால் விழா நடந்தது. வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் நடத்தப்படும் இவ்விழா சோழ மன்னர்கள் காலத்திலிருந்தே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்ட இவ்விழாவை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த எட்டாண்டுகளாக நடத்தி வருகின்றனர். திரட்டுப்பால் விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் பெண் யானை செங்கமலத்தின் மீது வைக்கப்பட்டு, திரட்டுப்பால் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.இதைத்தொடர்ந்து, கோவிலில் பூஜையில் வைத்து வழிபாடு நடத்திய பின்னர், பக்தர்களுக்கு திரட்டுப்பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !