உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

 திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் ஜப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 11.30 மணியளவில் சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது, தொடர்ந்து 12.00 மணியளவில் பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதையடுத்து சுவாமி கோவிலை சுற்றி வந்தபின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !