தையூர் தடுத்தாண்டேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்
செஞ்சி; தையூர் தடுத்தாண்டேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள தடுத்தாண்டேஸ்வரர் உடனுரை தையல் நாயகி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் 45 லட்சம் ரூபாயும்,பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 20 லட்சம் ரூபாய் என மொத்தம் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தேர் வடிவமைத்துள்ளனர்.
இதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு நேற்று காலை கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடந்தது.காலை 9.30 மணிக்கு கலச நீரை சிவவாத்தியங்கள் முழுங்க தேரின் மீது ஏற்றினர். தொடர்ந்து செத்தவரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் சிவஜோதி மோனசித்தர் சிறப்பு பூஜை செய்து தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். அ.தி.மு.க., வல்லம் ஒன்றிய செயலாளர், முன்னாள் சேர்மன் அண்ணாதுரை முன்னிலைவகித்தார்.மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அன்பழகன், தேர் திருப்பணிக்குழு தலைவர் தென்னரசு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.