உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவேப்பம்பூண்டியில் கோவில் கும்பாபிஷேகம்

கருவேப்பம்பூண்டியில் கோவில் கும்பாபிஷேகம்

 உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட வரசித்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, யாகசாலை பூஜை துவங்கி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்குபுனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மஹா தீபாராதனையும் நடந்தது. கருவேப்பம்பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமவாசிகள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !