உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரில் ஐயப்பன் கோவில் காவிரி கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் செய்து இரண்டு ஆண்டுகளானதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, காயத்திரி மந்திரம், 108 ?ஹாமம் கலச அபிஷேகம் மற்றும் ஐயப்பன், விநாயகர், மஞ்சமாதா ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகள், ?ஹாமங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !