உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலபைரவர் பூஜை: பக்தர்களுக்கு தடை

காலபைரவர் பூஜை: பக்தர்களுக்கு தடை

ஆத்தூர்: தலைவாசல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள அறிக்கை: காமநாதீஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவருக்கு பூஜை நடக்கிறது. நவ., 8ல்(நாளை) நடக்க உள்ள, தேய்பிறை அஷ்டமி பூஜை, ஆகம விதிப்படி முறையாக நடக்கும். இப்பூஜைக்கு, திரளானோர் வருவர் என்பதால், கொரோனா தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற முடியாது என்பதால், இந்த பூஜையில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதியில்லை. அன்று மாலை, 6:00 முதல், 9 காலை, 6:00 மணி வரை, பக்தர்கள் கோவிலுக்குள் வர அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !