திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
ADDED :1796 days ago
தஞ்சாவூர் : குருபெயர்ச்சி முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதியாக கொண்டுள்ள ராஜ குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தஞ்சாவூர் அருகே, குரு பரிகார தலமான வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நடந்தது. தஞ்சாவூர் அருகே திட்டையில், குரு பரிகார தலமான வசிஷ்டேஸ்வரர் கோவிலில், தனி சன்னதியில், குரு பகவான், ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. குரு பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. ராஜ குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.