உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா : சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது

திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா : சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விசாக திருவிழா நேற்று துவங்கியது. திருவிழா தொடக்கமாக நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்பட்டது.வசந்த உற்சவம்: இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புஷ்ப அலங்காரத்தில், வசந்த மண்டப மேடையில் எழுந்தருளினர். மேடையின் அடிப்பாகத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பலகையில் சுவாமி எழுந்தருளினார். அங்கு வசந்த உற்சவம் முடிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்த உற்சவம் ஜூன் 2 வரை நடக்கும்.பால்குட திருவிழா: ஜூன் 3 அதிகாலை ஐந்து மணிக்கு சண்முகர், வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7 மணிக்கு சுவாமி கம்பத்தடி மண்டபம் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வார். பாதயாத்திரை பக்தர்கள் சுமந்துவரும் குடங்களில் உள்ள பால், சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காலை 9 முதல் 2 மணிவரை அபிஷேகம் செய்யப்படும்.மொட்டையரசு திருவிழா: ஜூன் 4ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்க குதிரை வாகனத்தில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவர். தங்கரதம் புறப்பாடு இல்லை: மே 25 முதல் ஜூன் 4வரை நடக்கும் வைகாசி விசாக திருவிழாவில், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பங்கேற்று அருள்பாலிப்பர். இந்த நாட்களில் தங்க ரதம் புறப்பாடு இல்லை, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !